நான் போலீஸ் இல்லடா....!: திருட்டு தங்கத்தை ஆட்டைய போட்டு அல்வா கொடுத்த அசிஸ்டெண்ட் கமிஷனர்!

By Vishnu PriyaFirst Published Jan 19, 2019, 11:09 AM IST
Highlights

’தேன் எடுத்தவன் புறங்கையை எத்தனை நாளைக்குதாம்லே நக்காம கெடப்பாம்? ஒரு நாள் நக்குவாம்லே!’...இது டைரக்டர் ஹரியின் ஏதோ ஒரு பட டயலாக் என்று நினைத்துவிடாதீர்கள். அச்சு அசலாக நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ளும் டயலாக் இது. 

’தேன் எடுத்தவன் புறங்கையை எத்தனை நாளைக்குதாம்லே நக்காம கெடப்பாம்? ஒரு நாள் நக்குவாம்லே!’...இது டைரக்டர் ஹரியின் ஏதோ ஒரு பட டயலாக் என்று நினைத்துவிடாதீர்கள். அச்சு அசலாக நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ளும் டயலாக் இது. அதுவும், நேர்மையான போலீஸ் அதிகாரிகளைப் பற்றி இப்படி கமெண்ட் அடிக்காமல் அவர்களுக்கு தூக்கம் வராது. 

அப்படித்தான்  தேனை பிழியப் பிழிய எடுத்தும் கூட வெகு நாட்களாக அதை டேஸ்ட் பண்ணாமல் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, சமீபத்தில் ஆசை மிகுதியில் அதை குடித்துப் பார்க்க, கும்மி எடுக்காத குறையாக அவரை ரவுண்டு கட்டிவிட்டார்கள் சீனியர் ஆபீஸர்கள். 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையின் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்தவர் சக்கரவர்த்தி. இவர் சில பல வருடங்களுக்கு முன்பாக இதே மாவட்டம் கடையநல்லூரில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்தபோது கள்ளச்சாராயத்தை ஓடஓட விரட்டி அழித்தாராம். இதனால் பல பெண்கள் இவரது பெயரை தங்கள் கைகளில் பச்சைக் குத்திக் கொண்டார்களாம். ஆனால் வருடங்கள் ஓடியோடி, ப்ரமோஷன் பெற்று இதோ ஏ.சி. ஆகிவிட்டார் மனிதர்.

 

காலங்கள் மாறுனதோடு அதிகாரியின் மனசும் மாறிடுச்சு போல. சமீபத்தில் ஒரு பெரும் சிக்கலில் சிக்கி, தண்டனை டூட்டிக்கு மாற்றியுள்ளனராம். அதாவது திருச்சியை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் திருமணத்துக்கு பயன்படுத்துவதற்காக துபாயில் இருந்து மூன்று கிலோ தங்கத்தை ஒரு கடத்தல் பேர்வழி  கொண்டுவந்தாராம். காவல்துறைகளின் கண்களில் இருந்து தப்பியவர் அதை சம்பந்தப்பட்ட பார்ட்டியிடம் கொடுக்காமல் தானே அமுக்கிக் கொண்டார். 

பாதிக்கப்பட்ட டீம் அங்கேயிங்கே சுற்றி வந்து சக்கரவர்த்தியிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். அவர் காதும் காதும் வைத்தாற் போல் சென்று அந்த கடத்தல்காரனை வளைத்து, தங்கத்தை பிடுங்கிவிட்டார் முழுவதுமாக. ஆனால் வழக்கு ஏதும் போடாமலும், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்காமலும் இவரே தங்கத்தை அமுக்க முயன்றிருக்கிறார். பல முறை கேட்டும் தரவில்லை. நொந்து போன தொழிலதிபர் விவகாரத்தை அப்படியே டி.ஜி.பி. அலுவலகம் வரை கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் பக்காவாக விசாரணை நடத்திவிட்டு, சக்கரவர்த்தியை கார்னர் செய்துவிட்டனர். அவருக்கு உதவியாக இருந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட நான்கு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றியடித்து தண்டனை தந்திருக்கிறார்கள். ஒரு காலத்துல ‘நல்ல போலீஸ்ய்யா!’ன்னு பேர் எடுத்த மனுஷன் இப்படி தங்கத்துக்கு ஆசைப்பட்டு ‘நான் போலீஸ் இல்லடா....’என்று தகரமாய் போனது கேவலம்தான்.

click me!