Armstrong Death : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே.? முடிவானது புதிய இடம்.!! நீதிமன்றம் அனுமதி

By Ajmal Khan  |  First Published Jul 7, 2024, 2:58 PM IST

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

வட சென்னையின் முக்கிய நபராக திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன் தினம் பெரம்பூர் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாநகர் காவல்நிலையத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். தனது அண்ணன் ஆற்காடு சுரேஷை கொலை செய்த உதவியதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  ஆற்காடு சுரேஷன் தம்பி ஆற்காடு பாலு வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Latest Videos

Armstrong : ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே.? தொடரும் சிக்கல்.!! மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு-காரணம் என்ன.?

பொதுமக்கள் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு எம்பாம்பிங் செய்யப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை  செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் பகுதியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் மாநாகராட்சி எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் எங்கே.?

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக  அரசு சார்பாக பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் பகுதியில்  16 அடி சாலை தான் உள்ளது. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 200 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் வாதிடப்பட்டது.  இதனை தொடர்ந்து நீதிபதி ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.

ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சி அலுவலகத்தில் அடக்கமா? உருக்கமாக பேசிய நீதிபதி.. டைம் கேட்ட மனைவி.. நடந்தது என்ன?

பாதுகாப்பு வழங்க உத்தரவு

இதனையடுத்து இரண்டு முறை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால், உடலை பள்ளி மைதானத்தில் இருந்து இன்றே எடுத்தாக வேண்டும்  நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார். மேலும் உடல் எடுத்துச் செல்லப்படும் 20 கி.மீ. தூரத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்னை. கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை. அரசு அனுமதியுடன் கட்டிக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

இதனிடையே  திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யவுள்ள இடம்  ஆம்ஸ்டிராங்கின் உறவினரான காஞ்சனா தேவி என்பவருக்கு சொந்தமான இடம். 9ஆயிரத்து 461 சதுர அடி அளவு கொண்ட இடம். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அடக்கம் செய்ய கஞ்சனா தேவி அனுமதி கொடுத்ததின் பேரில் அடக்கம் செய்யப்படுகிறது. இதனையடுத்து டி.ஆர்.ஓ ராஜ்குமார், ஆவடி தாசில்தார் விஜயகுமார், வி..ஏ.ஓ சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

 

click me!