அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 வருட சிறை தண்டனை.! எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

By Ajmal KhanFirst Published Jun 9, 2023, 9:39 AM IST
Highlights

பேனர், பதாகை வைப்பது தொடர்பாக விதிமுறைகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25,000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக  நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அனுமதியின்றி விளம்பர பலகை

தமிழகத்தில் பல்வேறு இடங்கில் அனுமதியின்று விளம்பர பலகை வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் வெளியானது. மேலும் சாலை விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதனால் மனித உயிர்களும் பலியாகும் நிலையானது ஏற்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுத்த அறிவுறுத்தியிருந்தது. இந்தநிலையில்   2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பரப் பலகைகள் பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 13.04.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,  விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் வைக்க உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.  

3 வருட சிறை தண்டனை

உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்களோ, நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளர்களோ தரவேண்டும். விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் (Hoardings) வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 வருட சிறை அல்லது 25,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும்  உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  அனுமதி காலம் முடிந்தும் அகற்றாமல் இருந்தாலும் சட்ட  நடவடிக்கைகள் பாயும் எனவும் நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 

இதையும் படியுங்கள்

சென்னையில் அதிர்ச்சி.. நள்ளிரவில் தடம் புரண்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு..!

click me!