சென்னையில் அதிர்ச்சி.. நள்ளிரவில் தடம் புரண்ட ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்.. பயணிகளுக்கு என்ன ஆச்சு..!

By vinoth kumar  |  First Published Jun 9, 2023, 9:12 AM IST

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவ்வப்போது சிறிய ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. 


சென்னை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடிசாவில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவ்வப்போது சிறிய ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று இரவு சென்னையில் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- BREAKING : ஒடிசாவில் மீண்டும் துயர சம்பவம்.. சரக்கு ரயிலில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

விஜயவாடாவில் இருந்து ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுள்ளது. அப்போது, பணிமணை அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கேஸ் ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

click me!