அலெர்ட்.. தமிழகத்தில் இன்று மழை அடிச்சு ஊத்தப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Published : Apr 24, 2022, 07:41 AM IST
அலெர்ட்.. தமிழகத்தில் இன்று மழை அடிச்சு ஊத்தப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

சுருக்கம்

இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.  

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி ,கள்ளகுறிச்சி, திருச்சி, திருப்பத்தூர் , திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது.

நாளை மற்றும் 26 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் ,டெல்டா மாவட்டங்கள் , அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!