Asani : தீவிரமானது அசானி புயல்.. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

By Raghupati RFirst Published May 9, 2022, 11:02 AM IST
Highlights

Asani Storm : காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்கக்கடலில் ‘அசானி புயல்’ உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அதிகபட்சமாக நேற்று, திருச்சி, மதுரை, ஈரோடு, வேலூர், திருத்தணி பகுதிகளில் 106 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பிற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயில் நிலவியது. இதற்கிடையே, வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது. 

அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளை நெருங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாட்டில அசானி  புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 

நாளை முதல் மூன்று நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதி மற்றும் ஆந்திரப் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை , திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி  உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி.. மகிழ்ச்சி செய்தி சொன்ன வனத்துறை !

இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா

click me!