கொட்டும் மழை என்றும் பாராமல் பூச்சந்தையை படையெடுத்த வியாபாரிகள்; இந்த வரும் அமோக விற்பனை…

First Published Sep 30, 2017, 9:21 AM IST
Highlights
The merchants bought flowers in pouring rain


கன்னியாகுமரி

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கொட்டும் மழை என்றும் பாராமல் தோவாளை பூச்சந்தையில் வியாபாரிகள் கடந்தாண்டை விட 30 டன் வரை பூக்களை விற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் விழாக் காலங்களில் விற்பனை களை கட்டும். ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்கள் தொடர்ந்து கொண்டாடப்படுவதால் தோவாளை பூச்சந்தையில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகவே பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கே சந்தையில் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். ஓசூர், கொடைரோடு, சத்தியமங்கலம், உதகை போன்றப் பகுதிகளிலிருந்து அதிகளவில் பூக்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன.

புதன்கிழமை இரவு முதலே பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் குடைபிடித்தபடி பெரும்பாலானோர் மலர் விற்பனையில் ஈடுபட்டனர். மழைநீரில் பூக்கள் நனையாமல் இருக்க சந்தை வளாகத்தில் தார்பாலின் விரிக்கப்பட்டு இருந்தது.

இந்த வருடம் வழக்கத்தைவிட 30 டன் வண்ண பூக்கள் கூடுதலாக விற்பனையானது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தோவாளை பூச்சந்தை வியாபாரிகள, “கனமழை கொட்டியதால் பூ வியாபாரம் பாதிக்கும் என்ற அச்சத்தில் இருந்தோம். ஆனால் ஆயுதபூஜை, விஜயதசமி தேவைக்காக மழையை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், மக்களும் அதிகளவில் பூக்களை கொள்முதல் செய்தனர். 30 டன் வரை அதிகளவில் பூக்கள் விற்றுத் தீர்ந்ததால் நாங்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

click me!