Pongal Gift : பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் யார்.? யாருக்கு கிடைக்கும்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

Published : Jan 05, 2024, 01:22 PM IST
Pongal Gift : பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் யார்.? யாருக்கு கிடைக்கும்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

சுருக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்ட  யார்.? யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நாளில், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், 

தமிழக அரசு சார்பாக பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம் கிடைக்காது

 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238 கோடியே 92 லட்சத்து 72ஆயிரம் ரூபாய் செலவிடப்படும் என அறிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் தொகுப்போடு  இலவச வேட்டி சேலைகள்  வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்..

இந்தநிலையில், யார்.? யாருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி,  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

Breaking News : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.... பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகை - முதலமைச்சர் அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்