
கடந்த வெள்ளிக்கிழமை ம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்த 55 வயதாகும் இலங்கை அகதி ராஜேஸ்வரி, ரோட்டில் பார்சல் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் அதனை எடுத்த போது, பார்சலில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவ்வழியாக சென்ற 21 வயது இளைஞன் கோகுல் என்பவரை உதவிக்கு அழைத்து, அந்த பணத்தை பத்திரமாக எடுத்து வந்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் படிக்க:தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..சென்னை அண்டை மாவட்டங்களில் மிக கனமழை ..
சாலையில் கண்டெடுக்கப்பட்ட பணம் குறித்து போலீஸ் சார்பில் வாட்ஸ் அப் குழுக்களில் தகவல் பகிரப்பட்டது. அதன் மூலம் அந்த பணம் இருந்த பார்சல், ஜோஸ்வா என்பவருடையதும், தனது மகளின் பேறுகாலத்திற்கு நண்பரிடம் இருந்து கடனாக வாங்கிக்கொண்டு வரும் நிலையில் தொலைந்ததும் தெரிய வந்தது.
இதனை உறுதிப்படுத்திய சத்தியமங்கலம் போலீசார், பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சாலையில் கிடந்த பணத்தை பத்திரமாக எடுத்து கொடுத்து, ராஜேஸ்வரி மற்றும் கோகில் இருவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி, காவல்துறையினர் பாராட்டினர்.
மேலும் படிக்க:சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி..!