தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ளது. மேலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க:நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.. இன்று 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:வடகிழக்கு பருவமழை... இன்று 20 மாவட்டங்களில் கனமழை.. இன்றைய வானிலை அப்டேட்..