
குடிநீர் பற்றாக்குறையை போக்க, “கிராம ஊராட்சிகளில் உள்ள தனிநபர் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்” என்று திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கட்டளையிட்டு உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
அதில், “திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை முறையாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, “கிராம ஊராட்சிகளில் உள்ள தனிநபர் வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்,
மேல்நிலைத்தொட்டியின் கீழ் பொதுக்குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்,
மேல்நிலைத்தொட்டியில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் கிராமங்களில் தனியாக தண்ணீர் தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ஆழ்துளை கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் பழுதடைந்து இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.