பசுக்கு மட்டும் தான் அரவணைப்பு தினமா.? காளைகளுக்கு இல்லையா.? -ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் திடீர் கோரிக்கை

By Ajmal Khan  |  First Published Feb 9, 2023, 9:16 AM IST

பசு அரவணைப்பு தினத்தை கொண்டாடுவதைப்போல் ஜனவரி 16 ஆம் தேதி  காளைகளை அரவணைக்கும் வகையில் தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 


பசு அரவணைப்பு தினம்

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர்கள் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வரும் நிலையில், அந்த தினத்தில் பசுக்களையும் அரவணையுங்கள் என மத்திய அரசு புதிய உத்தரவை ஒன்றை வெளியிட்டுள்ளது.  விலக்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டும், வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14 ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.  மேற்கத்திய கலாச்சாரத்தின் கடுமையான தாக்கத்தால் நாட்டில்  வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

பிப்ரவரி 14 காதலர் தினம் மட்டுமா? இதுவும் தான்! பசு அணைப்பு தினத்தை கையில் எடுத்த விலங்குகள் நல வாரியம்

காளைகள் அரவணைப்பு தினம்

எனவே, நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பசு அணைப்பு தினத்தை கொண்டாடுமாறு பொதுமக்களை விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தநிலையில் பசுக்கு மட்டும் தான் அரவணைப்பு தினம் கொண்டாடுவீங்களா என போட்டி போடும் வகையில் காளைகளுக்கும் அரவணைப்பு தினம் கொண்டாட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  இந்திய விலங்குகள் நல வாரியம் 06/02/2023 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது .

ஜல்லிக்கட்டு பேரவை கோரிக்கை

அதில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக(Cow Hug Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதே போல் ஜனவரி 16 -ம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக (Bull Hug Day) கொண்டாட வேண்டி இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பேருந்தில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு எச்சரிக்கை! டிரைவர், நடத்துநருக்கு புதிய உத்தரவிட்ட போக்குவரத்துதுறை

click me!