
தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் டிச.2-ல் ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைதல், அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகி மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அரசு சொத்துக்களை அடமானம் வைக்கக்கூடிய நிலையில் இந்த அரசு உள்ளது எனவும் நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 2 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைத்த குழுவின் அறிக்கையை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் வாங்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெறூம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அரசு எப்போது அழைத்தாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும்