அரசு பள்ளிகளில் எண் கணிதம் பாடமாக அறிமுகம்.? மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.?

Published : Jul 19, 2025, 10:42 PM ISTUpdated : Jul 19, 2025, 10:45 PM IST
School Student

சுருக்கம்

 சர்வதேச எண்கணிதப் போட்டி சென்னையில் நடைபெற்றது.  2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

International Arithmetic Competition : நாடு முழுவதிலிருந்தும் 2500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற 6-வது சர்வதேச எண்கணித போட்டியை இந்தியன் அபாகஸ் நிறுவனம் நடத்தியது. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம் சர்வதேச அளவில் மனக்கணிதப் போட்டியை 26 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு சர்வதேச எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டியை சென்னையில் நேற்று நடத்தியது. இந்த ஆண்டு இதில் சுமர் 2500-க்கும் மேற்பட்ட பள்ளி மாண- மாணவியர்கள் பங்கேற்றார்கள். 

சென்னையில் சர்வதேச எண் கணித போட்டி

இந்த போட்டியினை தமிழ்நாடு அரசின் மாநில கல்வி கவுன்சில் ஆராய்சி மற்றும் பயிற்சி துணை இயக்குனர் டாக்டர் ஷமீம் தொடங்கி வைத்தார். வெற்றிபெற்ற மாணவ- மாணவியர்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையர் ராமன், சான்றிதழ்களும், பதக்கம், பரிசு பொருள்கள் மற்றும் வெற்றி கோப்பைகளும் வழங்கி கெளரவித்தார். இந்த பிராண்டமான போட்டியினை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் இந்தியன் அபாகஸ் அமைப்பு பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சரியான வழிமுறைகளுடன் சிறப்பான தேர்வு எழுதி வெற்றி பெற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். 

இந்த போட்டி குறித்து இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் அகம்மது கூறுகையில், எங்களது முதல் நோக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள சிறிய கிராமத்தின் எளிய மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த கணித பயிற்சியினை பயன்படுத்தி சாதனை மாணவர்களாக திகழ வேண்டும், அது மட்டுமல்லாது உலக அளவில் இந்திய மாணவர்கள் எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சாதனை படைத்து திகழ வேண்டும், 

அரசு பள்ளிகளில் எண் கணித பாடம்

அந்த இலக்கை நோக்கி நாங்கள் 26 ஆண்டுகளாக ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகிறோம். மேலும் இதை சர்வதேச அளவில் போட்டியாக நடத்தவும் மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் இதை ஒரு கணித பாடமாகவும் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக மாநில அரசு அறிமுகம் செய்தால் சர்வதேச அளவில் நாம், நமது இந்திய மாணவர்களை உலக அரங்கில் கல்வியில் சிறக்க செய்யலாம் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!