
இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். ஷானாக் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகம் வந்ததது. பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஐ.சி.ஜி.எஸ். எனும் ரோந்து கப்பல் கடந்த 21 ஆம் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 150 மீட்டர் நீளமும் மணிக்கு 23 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக் கூடியதுமான இந்த ரோந்துக் கப்பல் நேற்று காலை சென்னை துறைமுகம் வந்தது.
உற்சாக வரவேற்பு
சரியாக காலை 9 மணிக்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்த ஐ.சி.ஜி.எஸ். ஷானாக்கிற்கு கடலோர காவல் குழும கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையிலான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
150 மீட்டர் நீளமும், மணிக்கு 24 நாட்டிக்கல் வேகத்தில் செல்லக்கூடியதுமான ஷானாக்கில் கமாண்டராக டி.ஐ.ஜி.சசிகுமார் உள்ளார். 14 அதிகாரிகள், 98 பணியாளர்கள் கொண்ட இந்த ரோந்து கப்பல் எல்லையை பாதுகாக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் பயன்படுத்தப்படவுள்ளது.