வங்கக்கடலில் உருவாகிறது புயல்..! மிக கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்

Published : Dec 05, 2022, 10:04 AM ISTUpdated : Dec 05, 2022, 10:06 AM IST
வங்கக்கடலில் உருவாகிறது புயல்..! மிக கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்

சுருக்கம்

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை,புயலாக உருமாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகிறது புயல்

குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

ஜல்லிக்கட்டு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவாகியுள்ள வமேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா நினைவு நாள்..! பிளவுபட்ட அதிமுக..? நான்கு பிரிவாக அஞ்சலி செலுத்தும் நிர்வாகிகள்

தமிழகம்-புதுவை- ஆந்திராவை நெருங்கும் புயல்

தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடல் பகுதியை நோக்கி வரும் 8ஆம் தேதி புயல் சின்னமாக நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.. ஏற்கனவே தமிழகத்தில் 7 ஆம் தேதி கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 8 ஆம் தேதி மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

145 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி.. 3-வது தளத்துக்கு சீல் வைப்பு..!
 

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!