சிக்கியது ஜாய் ஆலுக்காஸ்...! 10 நிறுவனங்களில் மட்டும் ரூ. 1100 கோடி வரி ஏய்ப்பு...! அதிரடி காட்டும் ஐடி...!

First Published Jan 12, 2018, 6:33 PM IST
Highlights
The Income Tax Department has reported 1100 crore tax evasion.


சென்னை தியாகராய நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1,100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை தியாகராயநகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள ஜாஸ் ஆலுக்காஸ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உலகம் முழுவதும் செயல்பட்ட வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இந்நிறுவனத்துக்கு ஏராளமான நகைக்கடை கிளைகள் உள்ளன. சென்னை தியாகராயநகரில் உள்ள பிரசாந்த் டவரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரிஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து தி.நகர் ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை, அதன் உரிமையாளர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நுழைந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சென்னையில் மட்டுமல்லாமல் கேரளா உட்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை தொடங்கியது. 

தமிழகத்தில் சென்னை, சேலம், நாகர்கோவில், திருச்சி உட்பட ஜாய் ஆலுக்காஸின் 10 கிளைகளிலும் தீவிர சோதனை நடத்தினர். ஜாய் ஆலுக்காஸில் வேலை பார்க்கும் முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் 8 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. 

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1,100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

click me!