
விக்ரம் பிரபு ஹன்சிகா இணைந்து நடிக்கும் துப்பாக்கி முனை படத்திற்கு ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது
'வி கிரியேஷன்ஸ்' சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் "துப்பாக்கி முனை" படத்தில் விக்ரம் பிரபு என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபுவின் 12வது படமான ‘துப்பாக்கி முனை’யில், ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்கிறார்.
நடிகை ஹன்சிகா பிரபு தேவாவுடன் இணைந்து நடித்துள்ள "குலேபகாவலி" படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.