
ஒரே அறையில் இரண்டு கழிவறை
கழிவறை இல்லாத இடங்களில் கழிவறை வசதி ஏற்படுத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அந்த வகையில் ஒரே அறையில் ஒரு கழிவறை கட்டுவதற்கு பதில் குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு காரணமாக ஒரே அறையில் இரண்டு கழிவறையை கட்டிய சம்பவங்கள் கடந்த தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 70வது வார்டு ராஜிவ் காந்தி நகர், அம்மன் குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது ஒரே கழிவறையினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்தது. இது சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து அந்த கழிவறை மாற்றி அமைக்கப்பட்டது.
வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ
காஞ்சிபுரத்தில் விநோத கழிவறை
இதே போல கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்திலும் கட்டப்பட்ட கழிவறையில் ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் டாய்லெட் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரண்டு கழிவறைக்கும் இடையில் தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
நீலகிரியிலும் இரண்டு கழிவறை
இந்தநிலையில் மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிவறை கட்டப்பட்டது. இந்த கழிவறைக்கான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.
கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்
இந்தநிலையில் இந்த கழிவறையை அந்தபகுதியை சேர்ந்த சிலர் பார்வையிட சென்றுள்ளனர். அப்போது ஒரே அறையில் இரண்டு கழிவறை அமைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு கழிவறைக்கும் இடையில் சிறிய அளவிலான தடுப்புகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தலையில் அடித்துக்கொண்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்
தமிழகத்திலும் தலை தூக்கும் ஆன்மீக அரசியல்..! 200 நபர்களை காசிக்கு அழைத்து செல்லும் அறநிலையத்துறை