பஸ்ல பக்கத்துல பக்கத்துல பேசிக்கிட்டே போகலாம்!ஆனா ஒரே பாத்ரூம்ல ரெண்டு பேரா.? காஞ்சி அரசு கட்டிடத்தில் சர்ச்சை

By Ajmal KhanFirst Published Oct 11, 2022, 12:20 PM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் வளாகத்தில்  தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் ஒரே அறையில் 2 கழிவறைகள் அமைக்கப்பட்டிருப்பது  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 

ஒரே அறையில் இரண்டு கழிவறை

கழிவறை இல்லாத இடங்களில் கழிவறை வசதி ஏற்படுத்த மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒரே அறையில் இரண்டு கழிவறையை கட்டி காஞ்சிபுரம் சிப்காட் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதே போல சம்பவம் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது அப்போது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 70வது வார்டு ராஜிவ் காந்தி நகர், அம்மன் குளம்  பகுதியில்  மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  பொதுக்கழிப்பறை  கட்டப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறையில், ஒரே  கழிவறையினை இரண்டு பேர் அருகருகே அமர்ந்து  பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறைக்கு கதவுகளும் இல்லாததால் அந்த கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்தநிலையில் இந்த கழிவறை குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என விளக்கம் அளித்த மாநகராட்சி அந்த கழிவறையை மாற்றி அமைத்lது. 

பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. முகநூல் வீடியோ வெளியிட்ட நபரின் நிலையை பார்த்தீங்களா.!

இந்தநிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை முன்னிலையில் இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சாணி பவுடர், எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை - அமைச்சர் சுப்பிரமணியன்

இந்த அலுவலகத்தில் கட்டப்பட்டு உள்ள ஒரு அறையில் 2 கழிவறைகள் அரு, அருகே  அமைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக கட்டிட பொறியாளரிடம் அரசு சார்பாக விளக்கம் கேட்டக்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பஸ்சுல பக்கத்துல பக்கத்துல பேசிகிட்டே போகலாம்.. கருமம் புடிச்சவனுங்களே.. இங்கயுமா பேசிகிட்டே போறது..??

click me!