பைக்கில் சென்ற அதிமுக பெண் கவுன்சிலருக்கு கத்தி குத்து..! மறைந்து இருந்து தாக்கிய நபர் யார்.? போலீசார் விசாரணை

Published : Sep 04, 2023, 01:23 PM IST
பைக்கில் சென்ற அதிமுக பெண் கவுன்சிலருக்கு கத்தி குத்து..! மறைந்து இருந்து தாக்கிய நபர் யார்.? போலீசார் விசாரணை

சுருக்கம்

அதிமுகவை சேர்ந்த கடையம்  ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் தங்கம் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்த பரமசிவன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக பெண் கவுன்சிலருக்கு கத்தி குத்து

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் பாப்பான்குளம் பாட்டத் தெருவை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி தங்கம்(36) அதிமுகவைச் சேர்ந்த இவர், கடையம்  ஊராட்சி  9வது ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாப்பான்குளம் மலையான் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகன் பரமசிவன் (26) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக இரண்டு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டுள்ளது.  

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணியளவில் கடையம் சென்ற கவுன்சிலர் தங்கம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது ஏ.பி.நாடானூர் விலக்கு அருகே வந்த கவுன்சிலர் தங்கத்தை வழிமறித்த பரமசிவன் பணம் கொடுப்பது தொடர்பாக பிரச்சனை செய்துள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே சண்டை முற்றியதில் பரமசிவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கத்தை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த கவுன்சிலர் தங்கத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆழ்வார்குறிச்சி போலீஸார் தலைமறைவாக உள்ள பரமசிவனை தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரிப்பதில் நீடித்த சிக்கலுக்கு தீர்வு..! அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி