ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை மீட்க ஆன்லைனில் கடன்... சிக்கி கொண்ட காவலர்.! தற்கொலை முயற்சியால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Aug 28, 2023, 7:56 AM IST

ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாயை இழந்ததை மீட்க ஆன்லைன் கடன் செயலியில் பணம் வாங்கி சிக்கிக் கொண்ட காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைன் சூதாட்ட தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தது. இருந்த போதும் அதையும் மீறி ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் காவலர் ஒருவர் பணத்தை இழந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முரளி இவர் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருகிறார். கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். குடும்பத்தினர் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளனர். இவர் கடந்த ஜூன் மாதம்  முதல் அண்ணா அறிவாலயத்தில் காவல் பணிபுரிந்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

தற்கொலை முயன்ற காவலர்

கடந்த 24 ஆம் தேதி பணி முடிந்து தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் காவலர் முரளி பணிக்கு சென்னை திரும்பவில்லையென கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வீட்டின் அருகில் உள்ள ஏரியில் வைத்து விஷ மருந்து குடித்து விட்டதாகவும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் டி.சி.ஆர்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. காவலர் முரளியின் மொபைல் போனில் அதிகமாக ரம்மி விளையாடி வந்ததாகவும்,

ஆன்லைன் சூதாட்டம்- பணத்தை இழந்த காவலர்

அதன் மூலம் அதிக அளவில் பணத்தை இழந்துவிட்டதாகவும் இதற்காக ஆன்லைனில் லோன் போட்டு விளையாடியதாகவும், அந்த கடன் தொகையையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆன்லைன் லோன் நிறுவனத்தின் மிரட்டல் காரணமாக அதிர்ச்சி அடைந்த காவலர் முரளி தனது நிலத்தை விற்று அந்தப் பணத்தை கேட்டு வந்ததாகவும், ஆனால் உரிய நேரத்தில் பணம் கிடைக்காத காரணத்தால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஆண்ட்ராய்டு யூசர்களை கதறவிடும் Pink Whatsapp.. எந்த அளவிற்கு இது ஆபத்தானது? - மக்களே உஷார் - முழு விவரம்!
 

click me!