
வேலூர் மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை சில்வர் பகுதியில் 175 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை சில்வர் பகுதியில் வசித்து வருபவர் கவுரி நாதன். இவர் ரயில்வே ஊழியராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 175 சவரன் நகை, அரைக்கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.48,000 பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.