
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன் ஒருவர் குடும்பத்துடன் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் குறித்த பிரச்சனைகளுக்காக தமிழகத்தில் பெரும்பாலானோர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்கு இரையானது.
இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தீக்குளிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அசோக்குமார் என்பவர் தனது மனைவி , 2 குழந்தைகளுடன் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதையடுத்து போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது கஜேந்திரன் என்பவர் தனது வீட்டையும் பூர்வீக சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்வதாகவும் இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதைதொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.