"ப்ளூவேல்கேம்" விளையாட தடை...! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...!

First Published Sep 4, 2017, 12:12 PM IST
Highlights
The High Court bans to play BlueWay


ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அச்சத்துக்கும், அதிர்ச்சிக்கும் ஆட்படுத்தி உள்ள ப்ளூவேல் விளையாட்டுக்கு இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த சிறுவன் விக்னேஷ், புதுச்சேரியைச் சேர்ந்த சிறுவன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ப்ளூவேல் விளையாட்டுக்குப் பிறகு, தற்கொலை முயற்சி மேற்கொண்ட சிலரும் மீட்கப்பட்டுள்ளனர். ப்ளூவேல் விளையாட்டுக்கு தடை
விதிக்கக்கோரி, பொதுமக்கள் கூறியிருந்தனர். 

ப்ளூவேல் விளையாட்டை விளையாடி இளைஞர்கள் இறப்பதை தடுக்க தாமாக முன்வந்து விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் விசாரித்தனர். 

விசாரணையில், ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ப்ளூவேல் மத்திய - மாநில அரசுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி இதுகுறித்து பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ப்ளூவேல் விளையாட்டை பகிரப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளூவேலுக்கு எதிரான வழக்கில் ஐஐடி இயக்குநர், சைபர் கிரைம் போலீசார் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளுவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். ப்ளூவேல் விளையாட்டை பதிவிறக்கும் செய்ய முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு கூறியது.

click me!