
தேனி
அடிக்கடி திட்டியதால் தூங்கிக் கொண்டிருந்த பாட்டியை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற பேரனை காவலாளர்கள் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் மயாண்டி. இவரது மனைவி ஒச்சம்மாள் (85). இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் கருப்பாயி வீட்டில் வசித்து வந்த ஒச்சம்மாள் தான் இறக்கும்போது தனது பூர்வீக வீட்டில் இறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பூர்வீக வீட்டில் கருப்பாயின் மகன் ராஜா வசித்து வருகிறார். இதனையறிந்த கருப்பாயி மகன் ராஜா தனது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி கடந்த 15 நாள்களுக்கு முன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தங்கியிருந்த ஒச்சம்மாள் அடிக்கடி ராஜாவை திட்டியதால் ஆத்திரமடைந்த ராஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒச்சம்மாளை உருட்டுக் கட்டையால் அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஒச்சம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயமங்கலம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.