
கோயம்புத்தூர்
அரசு பேசி முடித்தபடி போக்குவரத்து கழகங்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் முன்பு நேற்று அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பி–1 கிளை எச்.எம்.எஸ். செயலாளர் உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். பி–2 கிளை எல்.பி.எப். செயலாளர் சிவராஜ், பி-3 கிளை ஏ.ஐ.டி.யூ.சி. வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “13–வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
2003–ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்,
அரசு பேசி முடித்தபடி போக்குவரத்து கழகங்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் எல்.பி.எப். மத்திய சங்க செயலாளர் ஆகிமூர்த்தி, எல்.பி.எப். நிர்வாகிகள் செந்தில், சிவக்குமார், இளங்கோ, சி.ஐ.டி.யூ. சேதுராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.