
அரியலூர்
அரியலூரில், சிமெண்டு ஆலைகளைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் எலும்புக்கூடு படத்தைப் பிடித்துக் கொண்டு இயற்கையை பாதுக்காக்காவிட்டால் மக்கள் எலும்புகூடா தான் மாறணும் என்றனர்.
அரியலூர் மாவட்டம், அண்ணா சிலை அருகே மாவட்ட இயற்கைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சிமெண்டு ஆலைகள் நிர்வாகத்தைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில், “அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகள் அளவிற்கு அதிகமாக சுண்ணாம்புக் கல்லை வெட்டி எடுத்து இயற்கையை அழித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு நிலத்தடி நீரையும் அதிகளவில் உறிஞ்சி எடுப்பதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
சிமெண்டு ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், அரியலூரில் உள்ள சிமெண்டு ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் எலும்புக்கூடு படத்தைக் கையில் பிடித்தபடி, இயற்கையை பாதுக்காக்காவிட்டால் மக்கள் இந்த நிலைக்கு தான் மாறிவிடுவோம் என்பதை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சங்கர், பாலசிங்கம், மாரியம்மாள், மகாலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.