ரேஷன் கார்டுதாரர்களுக்கு 'குட் நியூஸ்'... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !

By Raghupati R  |  First Published Jan 25, 2022, 7:36 AM IST

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு அரசு.


ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பிறகு ஸ்மார்ட் கார்டுகள் அதற்கான கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முறையில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். இதில் மோசடியை தடுக்க குடும்ப அட்டைதாரர்களே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க கைரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருப்பவர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்க முடியும். 

Latest Videos

undefined

இந்த முறையில்தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றை கார்டுதாரர்களுக்கு விரைந்து வழங்க, கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

பழைய முறையான ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்து, பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. கைரேகை பதிவு நிறுத்தப்பட்டதால், பிற மாநில கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இதையடுத்து, மீண்டும், 'ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க வேண்டும்' என்ற அரசின் பழைய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.இனி பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும், கைரேகை பதிவு செய்து தான் வழங்கப்பட உள்ளது. கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இனி வழக்கம் போல, ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

click me!