பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு.. நாளை 'போலியோ சொட்டு மருந்து முகாம்'.. தமிழக அரசு அறிவிப்பு !!

Published : Feb 26, 2022, 07:52 AM IST
பெற்றோர்களே உங்கள் கவனத்திற்கு.. நாளை 'போலியோ சொட்டு மருந்து முகாம்'.. தமிழக அரசு அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் நாளை  (27ம் தேதி)  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இனி வரும் காலங்களிலும் போலியா பாதிப்பு குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளும் அக்கறையில் அரசு ஈடுபட்டு வருகிறது.. இதற்காகவே, வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

தமிழகம் முழுவதும் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது எனவும் ,சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

மேலும்,போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும் எனவும்,இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும்,பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் அல்லது இருமல் அல்லது கொரோனா தொடர்பாக மையங்களுக்கு அனுமதிக்கக் கூடாது.

சொட்டு மருந்து கொடுக்கும் குழந்தைகளுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழல் காரணமாக ஜனவரி 23-ஆம் தேதி நடைப்பெறவிருந்த போலியோ சொட்டுமருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்த நிலையில்,நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெறவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!