TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

Published : Feb 26, 2022, 05:48 AM IST
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு (OTR) வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 

டிஎன்பிஎஸ்சி  தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு (OTR) வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 30 வரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நீட்டித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பித்து வருவதால் இணையதளம் வேகம் குறைவாக உள்ளதால் விண்ணப்பிப்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கான காலக்கெடுவை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.  ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!