Russia Ukraine Crisis:உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம்.. தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு

By vinoth kumarFirst Published Feb 24, 2022, 11:44 AM IST
Highlights

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதை அடுத்து அங்கு முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதை அடுத்து அங்கு முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதில், ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் யாராவது தலையிட்டால் வரலாறு காணாத வகையில் பேரழிவு சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 

இந்நிலையில் உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தூதரகத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது. உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பதற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் உள்ளனர். மேலும் சிலர் வேலைக்காகவும் உக்ரைன் சென்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. 044-28515288 /96000 23645 /99402 56444 என்ற தொலைப்பேசி எண்ணிலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!