Chennai Corporation Deputy Mayor: உதயநிதி ஆதரவுடன் துணை மேயர் பதவியை தட்டிதூக்கப்போவது இவர் தான்..!

By vinoth kumarFirst Published Feb 24, 2022, 6:51 AM IST
Highlights

சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 153 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் 167 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்கள் வரக்கூடிய மார்ச் 2ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மேயராக வரும் முதல் பட்டியல் சமூக பெண் யார் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் துணை மேயராக யார் வருவார் என்ற கேள்வி, எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ரேஸில்  உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசு தான் துணை மேயர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 153 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் 167 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்கள் வரக்கூடிய மார்ச் 2ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மேயராக வரும் முதல் பட்டியல் சமூக பெண் யார் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் துணை மேயர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. திமுகவை பொறுத்தவரை சிற்றரசு, மதன்குமார், சைதை மகேஷ்குமார், இளைஞர் அருணா, தனசேகரன் ஆகியோரில் யாரேனும் ஒருவரை கட்சித் தலைமை துணை மேயர் பதவிக்கு நிறுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தான் துணை மேயர் ரேஸிலும் பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்கையில் உதயநிதிக்கு நெருக்கமான சிற்றரசுதான் துணை மேயர் ரேஸில் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்  தேர்தலில் நின்ற சமயத்தில் அவர் வெற்றிக்காக  சிற்றரசு இரவு பகலாக பாடுபட்டார். மாவட்ட பொறுப்பாளராக இருந்தும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிலாமல்  உதயநிதி வெற்றிக்காக வேலை பார்த்தவர்  என்பதால் அவருக்கு உதயநிதி  சிபாரிசில்  துணை மேயர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. 

சென்னை மேற்கு திமுகவின் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு வந்தார். சிற்றரசுவிற்கு அப்போது பதவி கிடைக்கவே உதயநிதியின் ஆதரவுதான் முக்கிய காரணம் என்று செய்திகள் வந்தன. இவர் அன்பில் மகேஷ், உதயநிதி இருவருக்கும் மிகவும் நெருக்கமானவர். வடசென்னையை சேர்ந்தவர் மேயராகும் பட்சத்தில் துணை மேயராக  தென்சென்னையை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் ஆயிரம் விளக்கு தொகுதி 110வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!