சென்னை மாநகராட்சி தேர்தல்.. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Feb 23, 2022, 1:27 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்நிலையில், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் திமுகவும், அதிமுக 15 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

சென்னை மாநகராட்சியில் கே.கே.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 137-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தனசேகரன் அதிகபட்சமாக 10,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்நிலையில், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் திமுகவும், அதிமுக 15 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.ஒரு சில வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில், கே.கே.நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 137-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தனசேகரன் அதிகபட்சமாக 10,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் திமுக சார்பில் தனசேகரன், அதிமுக சார்பில் பழனி, பாஜக சார்பில் யுவராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் தனசேகரன் மொத்தம் 15,568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பழனி 4,985 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் யுவராஜ் 2,679 வாக்குகளையும் பெற்றனர். சென்னையில் உள்ள 200 வாா்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா் தனசேகரன் என்பவது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சீட் கொடுக்கவில்லை என்று தலைமை மீது அதிருப்தியை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!