பைக்கில் ஜோடியாக சென்ற தம்பதி மீது அரசு பேருந்து மோதல்; மனைவி இறப்பு; கணவர் பலத்த காயம்...

 
Published : May 17, 2018, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பைக்கில் ஜோடியாக சென்ற தம்பதி மீது அரசு பேருந்து மோதல்; மனைவி இறப்பு; கணவர் பலத்த காயம்...

சுருக்கம்

The government bus hits couple who come by bike Wife death husband hurt ...

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் ஜோடியாக சென்ற தம்பதி மீது அரசுப் பேருந்து வேகமாக மோதியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் பலத்த காயத்தோடு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள செந்துறையைச் சேர்ந்தவர் சந்திரன் (65). ஓய்வுப் பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர். இவரது மனைவி ராமதிலகம் (55). 

இருவரும் செந்துறை அடுத்துள்ள கோட்டைப்பட்டிக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்கள், செந்துறை - துவரங்குறிச்சி சாலையில் மேட்டுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, துவரங்குறிச்சியிருந்து வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த ராமதிலகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சந்திரன் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து குறித்து நத்தம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் ஜோடியாக சென்ற தம்பதி மீது அரசுப் பேருந்து மோதி மனைவி உயிரிழந்தார் சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!