
திருவாரூர்
கணவர் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவாரூர் நீதிமன்ற வளாகம் முன்பு இரண்டாவது நாளாக பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ளது தேர்ப்பாக்குடி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அருள் மனைவி இலல்லிபாய்.
இவரது கணவர் வீட்டினர், இவரின் நகை மற்றும் உடைமைகளை பறித்துக்கொண்டு, இவரை அடித்து, வீட்டை விட்டு அனுப்பி விட்டனராம்.
இதுகுறித்து இலல்லிபாய் காவலாளர்களிடம் புகார் அளித்துளார். ஆனால், அதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, தன்னை தாக்கிய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் நீடித்தது. அப்போது அங்கிருந்த காவலாளர்கள் அவரிடம், காவல் நிலையத்தில் மனு கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.
ஆனால், இலல்லிபாய் அதனை மறுத்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தார். இதனால், காவலாளர்கள் அவரை அப்புறப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.