ரூ.2 லட்சம் மதிப்புள்ள பான் குட்கா பறிமுதல்... - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

 
Published : Jul 25, 2017, 06:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
ரூ.2 லட்சம் மதிப்புள்ள பான் குட்கா பறிமுதல்... - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை...

சுருக்கம்

The food security officers confiscated Gudka and Panamasala worth Rs.2 lakhs at the grocery store near Villarur in Villupuram district.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மளிகை கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருட்கள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக உணவு பாதிகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள மளிகை கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா இருப்பது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து அந்த பான் மசாலா மற்றும் குட்காவை அதிகாரிகள் பற்முதல் செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? நாள் குறித்த தமிழக அரசு!
புதிய பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் பெயர்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை