
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து கீழே விழுந்தது.
இரண்டு நாட்களாக தொடர்ந்து எறிந்த கட்டிடத்தின் ஸ்திர தன்மையை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அந்த கட்டிடத்தை இடிக்கும்பணி நடைபெற்று வருகிறது.
இந்த தீயின் புகை இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து 3 வாகனகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் 7 வாகனகளில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.