
ரஜினி நேற்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பிறகு, பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது இந்த சம்பவத்திற்கு காரணம் யார்? என கேட்டபோது “ சில சமூக விரோதிகள் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம். மக்கள் போராட்டம் போராட்டம்னு போனா நாடே சுடுகாடாகிவிடும்” என்றெல்லாம் பதில் கூறினார்.
அவரது இந்த பொறுப்பற்ற பதில்கள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பி இருக்கிறது. அதிலும் ரஜினியின் பதில்கள் எல்லாம் பா.ஜ.க-வை ஆதரித்து பேசுவது போலவே இருந்தது. ரஜினி போராட்டமே கூடாது என்று கூறியிருக்கிறாரே? என இயக்குனர் பா.ரஞ்சித்திடம் இன்று நடந்த பேட்டி ஒன்றின் போது பத்திரிக்கையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்த ரஞ்சித் அவர் போராட்டமே வேண்டாம் என சொல்லவில்லை. அப்படி சொல்லுபவர் அல்ல அவர். என கூறி சமாளித்திருக்கிறார்.
மேலும் ரஞ்சித் பேசுகையில் நான் ரஜினியிடம் பேசினேன். அவர் ”போராட்டங்கள் மூலம் நிகழும் இது போன்ற இழப்புகளின் வலி பெரியது. அதனால் தான் அவ்வாறு கூறினேன்” என தெரிவித்தார். மேலும் சில பிரச்சனைகளுக்கு போராட்டங்கள் மூலம் தான் தீர்வு காண முடியும் எனவும் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தவித்து வந்தனர். தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நச்சுக்கழிவுகளை வெளியிடும் ஆலைக்கு எதிராக அவர்கள் போராடி இருக்கிறார்கள். இது போன்ற வாழ்வுரிமையை போராடி பெறாமல், வேறு எதற்கு போராட வேண்டும் என ரஜினி சொல்ல வருகிறார்?. நல்ல சமாளிக்கிறீங்க ரஞ்சித். என கடுப்பாகி இருக்கின்றனர் மக்கள்.