ஓடும் பேருந்தை நிறுத்தி பிரபல ரவுடி வெட்டிக் கொலை! மதுரையில் பரபரப்பு!

 
Published : Dec 15, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஓடும் பேருந்தை நிறுத்தி பிரபல ரவுடி வெட்டிக் கொலை! மதுரையில் பரபரப்பு!

சுருக்கம்

The famous Rowdy murder in Madurai

பேருந்தில் பயணம் செய்த ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று சராமரியாக வெட்டி கொலை செய்துள்ளது. ஓடும் பேருந்தை நிறுத்தி கொலையாளிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அமர் (எ) அமரேஷ். இவர் மீது கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று நண்பகலில் அமரேஷ், அரசுப் பேருந்து மதுரை சென்று கொண்டிருந்தார். பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல் அமரேஷ் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழி மறித்து நிறுத்தியது.

பேருந்துக்குள் புகுந்த அவர்கள், அமரை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு, தங்களது வாகனங்களில் ஏறி தப்பியது. இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த அமர், பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தார். கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்தப்படி, பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அமரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார், மதுரை அருகே அச்சம்பத்து பகுதியில் நின்று கொண்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு, கொலையாளிகள் வேறு வாகனத்தில் தப்பியிருக்கலாம் என்றும், கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!