TNEB : தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்வா.? உண்மையா.? வதந்தியா.?தமிழக அரசின் FACT CHECK கூறுவது என்ன.?

By Ajmal Khan  |  First Published Jun 11, 2024, 8:39 AM IST

தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக வெளியான தகவலை உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லையென்றும் தற்போது பழைய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
 


மின் கட்டண உயர்வா.?

தமிழ்நாட்டில்  கடந்த 2022-ஆம் ஆண்டு  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை 1ம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான  மின்சாரக் கட்டணத்தை  உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக  நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை  உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

அதனால் யூனிட்டுக்கு  50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும் என கூறப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் 2.18% உயர்த்தப்பட்டது.  அப்போது பொதுமக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், மின் கட்டண உயர்வை  அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

TNEB: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை

வதந்தி - பொதுமக்கள் நம்ப வேண்டாம்

இந்தநிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக 39 தொகுதிகளிலும் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு திமுக கொடுக்கும் பரிசு என எதிர்கடசிகள் விமர்சித்து வந்தன. மேலும் மின் கட்டணம் தொடர்பாக பட்டியலும் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பான தகவலை தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு மறுத்துள்ளது.

மீண்டும் மின்கட்டண உயர்வு.. ஷாக் அடிக்கும் பழைய செய்தி

Fact checked by FCU | https://t.co/suJCBFjCJl pic.twitter.com/pZ2FT51Cb8

— TN Fact Check (@tn_factcheck)

 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட தகவலின் மீண்டும் மின்கட்டணம் பட்டதாக வரும் தகவல் வழங்கின தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை வெளியான செய்தி என்றும் தற்போது மின் கட்ட உயர்வு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது

click me!