இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.! அதிகம், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 5, 2023, 11:00 AM IST
Highlights

இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில்  6.20 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்க்கு முன்னதாக வரைவு வாகாகளர் பட்டியல் வெளியிடப்படும், 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் பெயர் சேர்த்தும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கியும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான சிறப்பு முகாம் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பாக நடத்தப்படும். இந்தநிலையில் இந்தாண்டிற்காக இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வெளியிட்டுள்ளார்.

கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து பேசலாமா? RN.ரவியை ரவுண்ட் கட்டும் டி.ஆர். பாலு

தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்

இதன் படி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில்  6.20 கோடி வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். அதில் 3.04 கோடி ஆண், 3.15 கோடி பெண் வாக்காளர்கள்; 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்களளும் உள்ளனர். வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் - 3,310 பேர், 18,19 வயதுக்குட்பட்டவர்கள் - 4,66,374 பேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.66லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் சிறிய தொகுதியான சென்னை துறைமுகத்தில்  1.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம்..! இங்கே மட்டும் எதிர்கிறார்கள்.! தமிழ்நாடு நோ.! தமிழகம் ஓகே-ஆர் என் ரவி

click me!