குற்றாலம் சென்ற கார் பனை மரத்தில் மோதி விபத்து - ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்...!!!

Asianet News Tamil  
Published : Aug 09, 2017, 11:01 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
குற்றாலம் சென்ற கார் பனை மரத்தில் மோதி விபத்து - ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்...!!!

சுருக்கம்

The driver of the car died in a car when he went to Kandanallur near Kathiyanallur in Tirunelveli district. 4 people were injured.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே,குமந்தாபுரத்தில் குற்றாலத்தில் சென்றபோது கார் மரத்தில் மோதி டிரைவர் இறந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர்  சேர்ந்த நண்பர்கள் 5 பேர் குற்றால்த்துக்கு நேற்று காரில் புறப்பட்டனர். இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கார் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென கார் நிலைதடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பக்கம் நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கி, காரை ஓட்டி வந்த  ஜாபர்சாதிக் ( 42)சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

காரில் இருந்த கமாலுத்தீன் (37), சேக் அலாவூத்தீன் (37), முகம்மது இமாமுத்தீன் (41), மகபூப்பாஷா (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அதிகாலையில் நடந்த விபத்தின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அனைவரும் மேல் சிகிச்சைகாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதிகாலையில் நடந்த விபத்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?