
மதுரை
மதுரை சுற்றுச்சாலை சிந்தாமணி விளக்கு அருகே அரசுப் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை சுற்றுசசாலை அருகே சென்றுக் கொண்டிருந்தது. சிந்தாமணி விளக்கு அருகே வந்தபோது பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பேருந்தை கட்டுக்குள் கொண்டுவர ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் அனைத்தும் தோல்வியிலே முடிந்தது.
வேகமாக வந்த பேருந்திற்கு பிரேக் அடித்ததில் சக்கரம் பேருந்தை விட்டு கழன்று ஓடியது. இதில், தரையில் உரசிய படியே சென்ற பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த மேட்டுப் பகுதியில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் கண்ணாடி உடைத்துக் கொண்டு கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பேருந்தில் பயணம் செய்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் ஓட்டுநரின் உடலை கைப்பற்றினர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்பட என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர்.