
அண்ணா நகர் 5 வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (60). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றுகிறார். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
அதே குடியிருப்பில் சிவராமகிருஷ்ணனுக்கு தரைதளமும் சொந்தமாக உள்ளது.
மேல் தளத்தில் வசித்து வரும் சிவராமகிருஷ்ணன் குடும்பத்தினர் தரை தளத்தை பயன்படுத்துவதே இல்லை.
மேல்தளத்திலேயே வசிப்பதால் தரைதளம் பூட்டியே இருக்கும்.
இரவில் மட்டும் சிவராமகிருஷ்ணன் தாயார் தரை தளத்தில் உறங்குவார். இந்நிலையில் நேற்று தரை தளத்தின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.
காலையில் தரை தளத்துக்கு வந்த சிவராம கிருஷ்ணன் பின்பக்க கதவு உடைக்கப்ட்டிருபதையும் பீரோ உடைக்கப்பட்டு தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.