
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்தில் குடியரசு தின விழாவில் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் 68-வது குடியரசு தினத்தையொட்டி காஞ்சிபுரம் அண்ணா காவலர் அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி இங்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர், தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பல்வேறு நல திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.