திமுக ஆட்சி குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை போல உள்ளது: மத்திய அமைச்சர் எல். முருகன்

By SG Balan  |  First Published Mar 10, 2024, 12:51 AM IST

தமிழகத்தில் திமுக குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக தோல்வியுற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.


தமிழகத்தில் திமுக குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக தோல்வியுற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். திமுகவைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்ய சபா உறுப்பினராக பொறுப்பேற்ற பின்பு நீலகிரி மாவட்டத்திற்கு முதன்முறையாக வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு உதகையின் நுழைவு வாயில் பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் பாஜக சார்பில் படுகர் இன மக்களின் கலாச்சார உடை அணிய வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tap to resize

Latest Videos

இதனை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ட.முருகன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மக்களையும், இந்து மதம், ராமர் கோவில், தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படும் வகையில் 2 ஜி ஊழலை செய்த ஆ.ராசா மீண்டும் நீலகிரி மக்கள் தேசத்தின் மீதும் தெய்வீகத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் எனவே ஊழல்வாதிகளை தூக்கி எறிய நாடாளுமன்ற தொகுதியில் ஆ ராசாவிற்கு பாடம் புகட்டி பாஜக வேட்பாளரை வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கவே திமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்று தனது சொந்த ரிசார்ட்டுக்கு மக்களின் வரிப்பணத்தில் சாலை அமைத்துள்ளதாகவும் பேசினார். மேலும் பேசிய அவர் உதகை மார்க்கெட் நகராட்சி கடைகள் இடித்துக் கட்டுவதில் லஞ்சம் வாங்குவதாக உதகை நகர மன்ற கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினரே நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது திமுக ஊழல் செய்து வருவது வெளிப்படையாக தெரிவதாகக் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய ஒரு கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது நாட்டின் வளர்ச்சி பாதையை மக்கள் விரும்புகிறார்கள் பிரதமர் அவர்களுக்கு மக்கள் கொடுக்கின்ற வரவேற்பை பாஜக தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியுற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதையாக தான் இன்றைய ஆட்சி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முக்கியமான நிர்வாகி  மூன்றாயிரம் கோடி போதை பொருள் கடத்தலில் தொடர்பு வைத்திருப்பதும், இங்குள்ள நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் 2ஜி ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளர்.

அதே போல் தான் இங்குள்ள அமைச்சர் மக்களின் வரிப்பணத்தில் பொது மக்களுக்கு சாலை  அமைக்கச் சொன்னால் அவருடைய தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார், மற்றொரு அமைச்சர் ஊழலில் சிக்கி சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் ஊழல் வழக்கில் கைதாகி அமைச்சர் பதவியை இழந்துள்ளார், இதுபோல் பதினோரு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவாகியுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் துணை போகி இருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல் முருகன் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள்  கேள்விக்கு பதில் அளித்த அவர், தேசிய பாராளுமன்ற குழு முடிவு செய்து என்ன சொல்கிறார்களோ அதை நிறைவேற்றுவது தான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டனின் வேலை, கட்சி என்ன கட்டளை இடுகிறதோ அதனை நிறைவேற்றுவது தான் எங்களின் வேலை என கூறினார். பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து பேசிய அவர் தேசிய தலைமை உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், தேசியக் கட்சி என்ன அறிவிக்கிறதோ அதை தான் நாங்கள் பின் தொடர்ந்து அதனை நிறைவேற்றுவோம். கமலஹாசன் பொருத்தவரை பாஜகவிற்கு ஒரு பொருட்டல்ல ஏனென்றால் கோவையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றவர் தான் கமலஹாசன். அதனால் கமலஹாசன்  பாஜகவிற்கு பொருட்டல்ல.

நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்பதாகும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என கூறினார். போதைப் பொருள் புலக்கம் குஜராத்தில் தான் அதிகரித்துள்ளது என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து குஜராத்திற்கு வரும்போது குஜராத் போலீஸ் மற்றும் மத்திய போலீஸ் அங்கிருந்து தான் போதை பொருள் கடத்தல்களை பிடிப்பதாகவும், போதைப் பொருள் கடத்தலை குஜராத் அரசு விழிப்போடு பிடித்துக் கொண்டிருக்கின்றது. சென்னையில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு வருகை தந்த பாரத பிரதமர் தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது கவலை அழிப்பதற்காக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சின்னம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சீமான் தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் அணுகாததால் வேறு யாரோ அவரது சின்னத்தை வாங்கிச் சென்றுள்ளனர் இதை பாஜக மீது திருப்பினால் பாஜக என்ன செய்யும் என்று அமைச்சர் முருகன் பதிலளித்தார்.

click me!