எரிசக்தி சேமிப்புகளில் வளர்ந்த நாடுகளை பின்பற்ற வேண்டும் – சொன்னவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்…

 
Published : Feb 17, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
எரிசக்தி சேமிப்புகளில் வளர்ந்த நாடுகளை பின்பற்ற வேண்டும் – சொன்னவர் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்…

சுருக்கம்

காரைக்குடி

வளர்ந்த நாடுகளில் எப்படி எரிசக்தி சேமிக்கப்படுகிறது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நமது நாட்டில் எரிசக்தி பிரச்சனைகளை சமாளிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா கூறினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மையம் ஆகியவற்றின் சார்பில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தையொட்டி கருத்தரங்கு நடைப்பெற்றது.

இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாக கிடைக்கக்கூடிய காற்று, சூரிய வெளிச்சம் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவது இல்லை. மாறாக செயற்கை உபகரணங்களான ஏ.சி. மின் விசிறி, மின் விளக்குகள் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இதன்மூலம் கிடைக்கக்கூடிய காற்று, வெளிச்சம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் சுகாதார கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் எரி சக்தியும் அதிகமாக செலவாகிறது.

இயற்கை அளித்துள்ள கொடைகளை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள வளர்ந்து வரும் நாடுகளில் எரிசக்தி சேமிப்பு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் எப்படி எரிசக்தி சேமிக்கப்படுகிறது என்பதை அறிந்து அதன்படி செயல்பட்டால் நமது நாட்டில் எரிசக்தி பிரச்சினைகளை சமாளிக்கலாம்” என்று துணைவேந்தர் சுப்பையா கூறினார்.

கருத்தரங்கில் பேசிய மதுரை தியாகராஜர் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் கோட்டைசாமி, “எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி சதீஷ், எரிசக்தியை எந்தெந்த வகைகளில் சேமிக்கலாம் என்பது குறித்த வழிமுறைகளை எடுத்துரைத்தார். நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வரும் நிலையில் நம் நாட்டின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு கிடைக்கக்கூடிய எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்தவும், சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறை தலைவர் கருப்பசாமி வரவேற்றார். முடிவில், பேராசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!