
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 261 மனுக்களுக்கும் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கு நேற்று நடைபெற்றது.
இதில், மக்கள் குறை தீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் சி.கதிரவன் தலைமைத் தாங்கி வழங்கினார்.
இதில், பல்வேறு குறைகளை தீர்த்து வைக்கக் கோரி மக்களிடமிருந்து மொத்தம் 261 மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கும்படி தொடர்புடைய அலுவலர்களுக்கு தக்க அறிவுறுத்தல்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவும் வழங்கினார்.
மேலும், நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். அதன்படி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.20 இலட்சம் வழங்கப்பட்டது.
தாட்கோ சார்பில் பவானி என்பவருக்கு ரூ.67 ஆயிரத்து 830 மானியத்துடன் ரூ.2 இலட்சத்து 26 ஆயிரத்து 100 மதிப்பில் இந்தியன் வங்கிக் கடன் உதவியாக ஆட்டோவையும் ஆட்சியர் வழங்கினார்.
இந்த குறைதீர் கூட்டத்தின்போது பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.