ரேஷன் கார்டுதாரர்களுக்கு 'குட் நியூஸ்'.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. என்ன தெரியுமா ?

By Raghupati RFirst Published Jan 29, 2022, 6:36 AM IST
Highlights

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய  அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை மேற்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். 

பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

அதில், ‘பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக வரும் 30-ஆம் தேதி (ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை) நியாயவிலைக்கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி (நான்காம் சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

click me!